நிறுவனப் பிரிவு
அலவ்வ பிரதேச செயலகக்காரியாலயத்திற்கு வருகை தருவது எவ்வாறு?
- கொழும்பு குருநாகல் பிரதான பாதையின் அலவ்வ புகையிரத நிலைய பக்கம் திரும்பி அலவ்வ நகரத்தை கடந்து அலவ்வ கிரிஉள்ள பாதையில் அலவ்வ வைத்தியசாலையை கடந்து சிறிது தூரத்தில் அலவ்வ பிரதேச செயலகக் காரியாலயத்தை அடையலாம்.
வியாபார / வணிக பெயர்கள் பதிவு செய்யும் போது உரிமையாளர் சமூகமளித்தல் அவசியமா?
- இது தொடர்பாக குறித்த வியாபார உரிமையாளர் சமூகமளித்தல் அவசியமாவதோடு தேசிய அடையாள அட்டையை கொண்டு வருதல் வேண்டும்.
மரணித்த ஒருவரின் வங்கிப் பணம் மற்றும் அடகு வைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செயற்படும் போது கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை?
- மரணித்தவரின் மரணச்சான்றிதழ்.
- விண்ணப்பதாரிக்கு இருக்கும் உறவுமுறைக்குறிய ஆவணங்கள் ( பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ்)
- வேறு உறுப்பினர்கள் இருப்பின் விண்ணப்பதாரிக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்குவதற்கு அவர்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லை என்ற சத்தியப்பிரமானம்.
- தேசிய அடையாள அட்டை.
மின்சார கட்டணம் செலுத்தும் பற்றுச்சீட்டில் பெயர் மாற்றம் செய்யும் போது கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை?
- மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு குறித்த இடத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் காணி உரிமைப்பத்திரம்.
- வீடு அபிவிருத்தி அதிகாரியின் அல்லது நகர சபையினால் வெளியிடப்படும் உரிமையை உறுதி செய்யும் கடிதம்.
- தேசிய அடையாள அட்டை.
சமூகசேவைப் பிரிவு
கர்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 20,000 ஊட்டச்சத்து கொடுப்பணவை பெறுவது எவ்வாறு?
- கர்பமுற்று 3 மாதங்கள் செல்ல முன் நீங்கள் பங்கு பற்றிய மகப்பேறு மருத்துவமனைக்குறிய பிரதேச செயலக காரியாலயத்தின் ஆரம்ப சிசு அபிவிருத்தி அதிகாரி அல்லது குறித்த நிகழ்சியை செயற்படுத்தும் அதிகாரியினால் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வி உதவி பெற தகுதியானவர்கள் யார்?
- குழந்தையின் தந்தை மரணித்தல் அல்லது குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பின் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு புலமை பரிசிலினை பெற முடியும்.
அரச சார்பற்ற அமைப்பொன்றை அல்லது நிறுவனமொன்றை பதிவு செய்வது எப்படி?
- ஆரம்பித்து ஒரு வருடம் சென்றதன் பின்பு அரச சார்பற்ற அமைப்பின் / நிறுவனத்தின் ஆவணங்களை வழங்கியதன் பின் பதிவு செய்யலாம்.
சமூர்தி நன்மையை புதிதாக பெற்றுக்கொள்ளளாமா?
- தற்போது புதிய சமூர்தி நன்மை பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுடன் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்வதற்காக முறையீடுகள் வழங்க முடியும்.
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் அல்லது மரணச் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதிகளை பெற்றுக்கொள்வது எப்படி?
- பிறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் அல்லது மரணச் சான்றிதழ் ஆகியவற்றின் இலக்கம் மற்றும் திகதி அறிந்திருப்பின் 100 ரூபாயும்
- பிறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் அல்லது மரணச் சான்றிதழ் ஆகியவற்றின் இலக்கம் மற்றும் திகதி அறிந்திருக்கவில்லையெனில் 200 ரூபாயும் பிரதேச செயலக காரியாலயத்திற்கு செலுத்தி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பை பதிவுசெய்வது எப்படி?
- சாதாரன பிறப்பை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்கு முன் குறித்த பிரிவில் பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யும் பதிவாளரை சந்தித்து பிறப்பை பதிவ செய்ய வேண்டும்.
- 3 மாதங்களின் பின் பிறப்பை பதிவு செய்வதற்காக மேலதிக மாவட்ட பதிவாளரை சந்தித்து குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளவும்.
ஓய்வூதிய பிரிவு
சிவில் ஓய்வூதியர் மரணித்த பின்னர் விதவை மற்றும் ஆனாதை குழந்தைகளுக்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வது எப்படி?
- முதலாவதாக ஓய்வூதியத்தின் மரணச் சான்றிதழை பெற்றுக் கொண்டு ஓய்வூதியத்தை வழங்காதிருத்தல்.
- கூடுதலான பணத்தொகை இருப்பின் அதைபெற்றுக்கொள்வதற்கு வங்கிக்கு கடிதம் அனுப்புதல்.
- பின்னர் குறித்த நபருக்கு பின்வரும் ஆவணங்களை கொண்டு வருமாறு அறிவித்தல்.
- ஓய்வூதியரின் மரணச் சான்றிதழின் முதற் பிரதி
- விதவையின் பிறப்புச் சான்றிதழின் முதற் பிரதி
- திருமணச் சான்றிதழின் முதற் பிரதி
- விதவையின் வங்கி கணக்கின் நிழற் பிரதி
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி
- விதவையின் ஆனாதை குழந்தையின் காட்டின் ( card) நிழற் பிரதி அல்லது விதவையின், அனாதையின் இலக்கம்
- கிராம உத்தயோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடவுச் சீட்டு அளவிலான வர்ண் புகைப்படம்.
- மேற்கூறப்பட்ட ஆவணங்களின் நிழற் பிரதி அனைத்தையும் கிராம உத்தயோகத்தரினால் உறுதிப்படுத்த வேண்டும்.
- அதன் பின் குறித்த தகவல்களை வழங்கியதன் பின் கோப்பை எடுத்துக்கொண்டு விதவை மற்றும் அநாதை குழந்தை ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
ஓய்வூதியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி இருப்பது ஏன்?
- குறித்த வருடத்தில் ஓய்வூதியர் உயிரோடு இருக்கிறார் என்ற ஆதாரத்தை பெற்றுத் தராத விடத்து ஓய்வூதியம் நிறுத்தப்படும்
- ஓய்வூதியரின் வருகையின் பின் வாழ்க்கை சான்றிதழை பெற்றுக் கொடுத்தல் கிராம உத்தயோகத்தரினால் உறுதிப்படுத்திக்கொண்டு வருமாறு அறிவித்தல்.
- பின்னர் மீண்டும் வாழ்க்கை சான்றிதழை பெற்றுக்கொண்டதன் பின் ஓய்வூதியத்தை பிதுப்பித்தல்.
விதவை மரணித்த பின் ஓய்வூதியத்தை உரிமையாளருக்கு வழங்காமல் இருப்பது ஏன்?
- விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய சட்டத்திற்கேற்ப விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பணத்திற்கு உரிமையுடைய நபர் மரணித்த பின்னர் அந்த நபருக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் அல்லது மீதிப்பணம் இரிப்பின் அப்பணம் அவர்களின் வாரிசுகளிக்கு வழங்குவதற்கு நாளாந்த மானியங்கள் இல்லை என விளக்குதல்.
















